80 வீதமான பகுதிகளில் மின்விநியோகம் வழமைக்கு

80 வீதமான பகுதிகளில் மின்விநியோகம் வழமைக்கு

நாடளாவிய ரீதியில் 80 வீதமான பகுதிகளில் மின்விநியோகம் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

பத்தரமுல்ல, பிலியந்தலை உள்ளிட்ட பல பகுதிகளில் மின்சார உப மின்நிலையங்களில் புணரமைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் தடைபட்ட மின் விநியோகம் விரைவில் வழமைக்கு திரும்பும் என அமைச்சு அறிவித்துள்ளது.

தற்போது, ​​கொழும்பு , கொலன்னாவ, களனி, கட்டுநாயக்க, மதுகம, களுத்துறை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, கொழும்பு தேசிய வைத்தியசாலை, அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையம், பியகம மற்றும் சபுகஸ்கந்த உள்ளிட்ட பல அத்தியாவசிய பகுதிகளுக்கு மின்சார விநியோகத்தை வழங்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

 

Share This