போதைப்பொருள் கடத்தற்காரரும் அவரது மனைவியும் வெளிநாட்டில் கைது

போதைப்பொருள் கடத்தற்காரரும், திட்டமிட்ட குற்றவாளியான ஒருவரும், அவரது மனைவியும் வெளிநாட்டில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்.
இலங்கைப் பொலிஸாரின் வேண்டுகோளுக்கிணங்க அவர்கள் இன்று அதிகாலை நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.
துப்பாக்கிச் சூட்டு முயற்சி, துப்பாக்கிகளை வைத்திருத்தல் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் உள்ளிட்ட பல குற்றங்கள் தொடர்பாக குறித்த சந்தேகநபர் தேடப்பட்டு வந்தார்.
சூதாட்டம், துப்பாக்கிகள் வைத்திருத்தல் மற்றும் போதைப்பொருள் கடத்த தொடர்பான குற்றங்களுக்காக அவர் முன்னரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்போது குறித்த சந்தேகநபரும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.