தொகுதி மறுவரையறை மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எச்சரிக்கை

தொகுதி மறுவரையறை மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எச்சரிக்கை

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தொகுதி மறுவரையறை திருத்த மசோதாவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் எனத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

மக்களவையில் இன்று இந்த மசோதா மீது வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர், மத்திய அரசின் இந்தச் சட்ட முன்வடிவு முழுக்க முழுக்க ஏமாற்றுத் திட்டமாக இருப்பதாகச் சாடியுள்ளார்.

பிரதமரும் உள்துறை அமைச்சரும் வாய்மொழி உத்தரவாதம் அளித்தாலும், சட்டத்தில் உள்ள அம்சங்கள் எதிர்காலத்தில் மாநிலங்களின் தொகுதிகளை மாற்றியமைக்கும் சூழ்ச்சியைக் கொண்டுள்ளதாக மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

எண்ணிக்கை பலம் இருக்கிறது என்ற திமிரில், எதிர்ப்பை மீறி இதனை நிறைவேற்றினால், அதற்கான விளைவுகளைத் தமிழ்நாட்டில் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி மற்றும் Vajpayee ஆகியோர் செய்தது போல, தொகுதி மறுசீரமைப்பை நிறுத்தி வைப்பதற்கான சட்டப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )