போர் நிறுத்தத்தை தொடங்க வேண்டாம் – இஸ்ரேஸ் பிரதமர் படையினருக்கு அவசர உத்தரவு
இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு, இன்று காலை 8:30 மணிக்கு (0630 GMT) காசாவில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ள போர்நிறுத்தத்தை தொடங்க வேண்டாம் என்று இஸ்ரேலிய இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
“காலை 8:30 மணி முதல் நடைமுறைக்கு வரவிருக்கு போர்நிறுத்தம், ஹமாஸ் வழங்குவதாக உறுதியளித்த விடுவிக்கப்பட்ட கடத்தப்பட்டவர்களின் பட்டியலை இஸ்ரேல் பெறும் வரை தொடங்காது என்று பிரதமர் பாதுகாப்பு படைக்கு அறிவுறுத்தியதாக,” என்று அவரது அலுவலகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், சிறிது நேரத்திற்குப் பின்னர், பெயர்களை ஒப்படைப்பதில் ஏற்பட்ட தாமதத்திற்கு “தொழில்நுட்பக் களக் காரணங்கள்” காரணம் என்று ஹமாஸ் குற்றம் சுமத்தியுள்ளது.
கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு உறுதிபூண்டுள்ளதாகவும் ஹமாஸ் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, “இந்தப் பெயர்கள் இன்னும் ஒப்படைக்கப்படவில்லை என்றால், கத்தார் ஹமாஸ் மீது நம்பமுடியாத அளவிற்கு அழுத்தம் கொடுக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
“எவ்வாறாயினும், ஹமாஸ் போர்நிறுத்தத்திற்கு உறுதிபூண்டுள்ளதை மீண்டும் வலியுறுத்தியுள்ளதுடன், மிக விரைவில் இந்தப் பெயர்களை ஒப்படைப்பார்கள்.” என்றும் சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.