தி.மு.க.வின் கொள்கையே கொள்ளை தான் –  விஜய்

தி.மு.க.வின் கொள்கையே கொள்ளை தான் – விஜய்

த.வெ.க.வுக்கு கொள்கை இல்லை என்று சொல்லும் தி.மு.க.வின் கொள்கையே கொள்ளை தான் என தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்..

காஞ்சிபுரத்தில் உள்ள ஜேப்பியார் கல்லூரியில் நடந்த உள்ளரங்கு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த விஜய்,

விமர்சனம் செய்ய ஆரம்பிப்பதற்கு முன்னரே அலறினால் எப்படி? காஞ்சி மக்களின் உயிரோடு கலந்துள்ளது பாலாறு. பாலாற்றில் அளவுக்கு அதிகமாக மணல் கொள்ளை நடக்கிறது.

22.70 லட்சம் யூனிட் மணல் கொள்ளை அடித்து காஞ்சிபுரத்தில் ஜீவநதியான பாலாற்றை அழித்துவிட்டார்கள். மணல் திருட்டின் மூலம் ரூ.4,730 கோடி கொள்ளை அடித்து உள்ளனர்.

60 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட காஞ்சிபுரம் மாவட்டம் பேருந்து நிலையம் இன்னும் புதுப்பிக்கப்படவில்லை. அரசால் வேறு ஒரு நல்ல இடத்தை தேர்வு செய்து பேருந்து நிலையத்தில் கட்டிக்கொடுக்க முடியாதா?

பரந்தூர் விவகாரத்தில் விவசாயிகள் பக்கம் தான் த.வெ.க. நிற்கும். நெசவாளர்கள் வறுமை, கந்துவட்டி கொடுமையால் அவதிபடுகின்றனர். மக்களை பற்றி யோசிக்கவே தி.மு.க.வினருக்கு நேரம் இல்லை” என்றார்.

CATEGORIES
TAGS
Share This