ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் NIRDC பிரதிநிதிகளுக்கிடையே  கலந்துரையாடல்

ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் NIRDC பிரதிநிதிகளுக்கிடையே கலந்துரையாடல்

ஆசிய அபிவிருத்தி வங்கிக்கான இலங்கைப் பிரதிநிதி Takafumi Kadono மற்றும் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான தேசிய வணிகமயமாக்கல் அணுகுமுறை (NIRDC)பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கை முகவர் நிலையத்தில் நேற்று இந்த சந்திப்பு இடம்பெற்றது.

தேசிய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக் கொள்கைகளை உருவாக்குவதற்கு, ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான தேசிய வணிகமயமாக்கல் அணுகுமுறை (NIRDC)ஊடாக செயற்படுத்தப்படும் வணிகமயமாக்கல் செயன்முறைக்கும் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி தொடர்பான சர்வதேச அனுபவத்தைப் பயன்படுத்துவது பற்றிய கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதே இதன் முதன்மை நோக்கமாகும்.

இந்த சந்திப்பில் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் துறையில் சர்வதேச அனுபவம் பெற்ற சிங்கப்பூரின் நன்யெங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் லர்வென் லுவும் கலந்துக்கொண்டார்.

NIRDC-யைப் பிரதிநிதித்துவப்படுத்தி, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் NIRDC நிறுவனருமான பேராசிரியர் கோமிக உடுகமசூரிய, NIRDC பணிப்பாளர் நாயகம் கலாநிதி முதித டீ. செனரத் யாபா மற்றும் பணிப்பாளர் இந்துனில் குணதிலக ஆகியோர் உட்பட பலர் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )