
இலங்கையை நிலைகுலையச் செய்த பேரிடர் – 400ஐ அண்மிக்கும் உயிரிழப்பு
டித்வா புயல் ஏற்படுத்திய மோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட பேரிடர் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 390 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் 352 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
382,651 குடும்பங்களைச் சேர்ந்த 1,373,899 பேர் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நாடு முழுவதும் தற்போது 1368 தங்குமிடங்கள் செயல்பட்டு வருகின்றன.
மேலும், 432 முழுமையான வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், 15688 பகுதி வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TAGS #Oruvan#oruvan #newsCyclone DitwahNatural Disasterஅனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்இலங்கைஒருவன்டித்வாதித்வாபேரிடர்
