தேவேந்திரமுனை துப்பாக்கி பிரயோக சம்பவம் –  மற்றுமொரு சந்தேகநபர் கைது

தேவேந்திரமுனை துப்பாக்கி பிரயோக சம்பவம் – மற்றுமொரு சந்தேகநபர் கைது

மாத்தறை, தேவேந்திரமுனை ஸ்ரீ விஷ்ணு ஆலயத்திற்கு முன்பாக இரண்டு இளைஞர்கள்  சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மற்றுமொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் நேற்றைய தினம் பெண் ஒருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.

டுபாயில் தலைமறைவாக இருக்கும் ‘பலே மல்லி ‘ என்ற ஷெஹான் சத்சர என்ற நபர் கொலையின் பின்னணியில் உள்ளமை பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தெவினுவர, கபுகம்புர பகுதியில்​ வீடொன்றில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு திரும்பிய போதே 29 வயதான இரு இளைஞர்கள் மீது வேனில் வருகைத் தந்த சிலர் தாக்குதல் மேற்கொண்டனர்.

CATEGORIES
TAGS
Share This