தேஷபந்துவின் விசாரணை அறிக்கை இந்த வாரம் சபாநாயகரிடம்

புதவி இடைநிறுத்தப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தொடர்பாக, விசாரணை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இந்த வாரம் சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளது.
அறிக்கை தயாரிக்கும் பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தேஷபந்து தென்னகோனால் முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படும் சட்டவிரோத செயற்பாடுகள், அதிகார துஷ்பிரயோகம் தொடர்பில் ஆராய்ந்து, அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழு, அண்மையில் சாட்சி விசாரணைகளை நிறைவு செய்தது.
குறித்த குழுவின் தலைவராக உயர்நீதிமன்ற நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சூரசேன செயற்படுவதுடன் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதியரசர் நீல் இத்தவல மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் ஈ.டபிள்யூ.எம் லலித் ஏக்கநாயக்க ஆகியோர் குழுவின் ஏனைய உறுப்பினர்களாக அங்கம் வகிக்கின்றனர்.