டெல்லி கார் குண்டுவெடிப்பு – பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்புக்கு தொடர்பு

டெல்லி கார் குண்டுவெடிப்பு – பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்புக்கு தொடர்பு

டெல்லி கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்புக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி, குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தில் தேசிய புலனாய்வு அமைப்புஅதிகாரிகள் நேற்று 42 முக்கிய தடயங்களை சேகரித்துள்ளனர் எனவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி செங்கோட்டை அருகே உள்ள சிக்னலில் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற இந்த தாக்குதலில் 13 பேர் உயிரிழந்ததுடன், 20க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்திருந்தனர்.

சாலையில் வெடித்து சிதறிய காரை, காஷ்மீரின் புல்வாமா பகுதியை சேர்ந்த வைத்தியர் உமர் முகமது நபி செலுத்தியதாகவும், இந்த சம்பவத்தில் அவர் உடல் சிதறி உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உமர் முகமது நபி  ஹரியானாவின் அல் பலா மருத்துவக் கல்லூரியில் வைத்தியராக பணியாற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடரிபில் குறித்த மருத்துவ கல்லூரியின் மேலும் சில மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், “டெல்லி குண்டுவெடிப்பில் பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்கொலை படை தீவிரவாதியாக செயல்பட்ட உமர் முகமது நபி உட்பட கைதான அனைத்து மருத்துவர்களும் அந்த அமைப்பின் தீவிர உறுப்பினர்களாக இருந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கு நேற்று தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து டெல்லி செங்கோட்டை அருகே குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தில் அதிகாரிகள் நேற்று 42 முக்கிய தடயங்களை சேகரித்தனர்.

Share This