தங்காலை சீனிமோதரையில் கண்டெடுக்கப்பட்ட மூவரின் சடலங்களை அரச இரசாயன பகுப்பாய்வுக்கு அனுப்ப தீர்மானம்

தங்காலை சீனிமோதரையில் கண்டெடுக்கப்பட்ட மூவரின் சடலங்களை அரச இரசாயன பகுப்பாய்வுக்கு அனுப்ப தீர்மானம்

தங்காலை, சீனிமோதரை பகுதியில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட வீடொன்றில் கண்டெடுக்கப்பட்ட மூவரின் சடலங்களில் பெறப்பட்ட மாதிரிகளை அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மரணத்திற்கான காரணத்தை கண்டறிவதற்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தங்காலை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி ருவன் நாணாயக்கார நேற்று (23) பிரேதப் பரிசோதனைகளை முன்னெடுத்திருந்தார்.

இதன்போது குறித்த நபர்களின் உடலில் ஐஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான போதைப்பொருட்கள் காணப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சட்ட வைத்திய அதிகாரி தங்காலை நீதவான் நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைக்கவுள்ளார்.

பொலிஸாருக்கு நேற்று முன்தினம் காலை கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது தங்காலை, சீனிமோதரை பகுதியில் வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்திருந்த இருவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.

குறித்த வீட்டில் இருந்து ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட மற்றொரு நபர் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் 03 லொறிகளில் இருந்து சுமார் 10,000 மில்லியன் ரூபா பெறுமதியான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் தொகை கண்டுபிடிக்கப்பட்டது.

குறித்த போதைப்பொருள் தொகை வௌிநாட்டில் தலைமறைவாக உள்ள திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குற்றவாளியான உனாகுருவே ஷாந்தவிற்கு  சொந்தமானதென பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த போதைப்பொருள் தொகை கடந்த 21ஆம் திகதி குடாவெல்ல, மாவெல்ல கடற்கரை பகுதிக்கு 02 படகுகளின் உதவியுடன் கொண்டுவரப்பட்டுள்ளது.

குறித்த போதைப்பொருள் தொகை முதலில் அருகிலுள்ள கைவிடப்பட்ட வீட்டில் சேமித்து வைக்கப்பட்டிருந்ததாகவும் தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர் இரண்டு சந்தர்ப்பங்களில் அந்த போதைப்பொருள் தொகை தங்காலை, சீனிமோதரை பகுதியில் குறித்த நபர்கள் உயிரிழந்திருந்த வீட்டுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

இதனிடையே, சம்பவம் தொடர்பில் இதுவரை 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் வைத்தியசாலையில் உயிரிழந்த நபரின் 02 மகன்கள், போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்ட லொறிகளின் பதிவு செய்யப்பட்ட 03 உரிமையாளர்கள் மற்றும் அவற்றில் லொறியொன்றின் சாரதி ஆகியோரும் உள்ளடங்குவர்.

இதனிடையே, நேற்று கைது செய்யப்பட்ட லொறியின் சாரதியை 07 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை

Share This