பாகிஸ்தானில் இயற்கை அனர்த்தம் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 307 ஆக உயர்வு

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வாகக் காஷ்மீரில் பெய்து வரும் பலத்த மழை, வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 307 ஆக அதிகரித்துள்ளது.
வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள மலைப்பாங்கான கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் அதிகளவான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் இயற்கை அனர்த்தம் காரணமாக சுமார் 74 வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மீட்புப் பணிகளின் போது ஹெலிகப்டர் விபத்துக்குள்ளானதில் பணியாளர்கள் ஐவர் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தான் வடமேற்கில் ஒகஸ்ட் 21 வரை பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது, அங்கு பல பகுதிகள் பேரிடர் மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.