இரு குடும்பஸ்தர்களுக்கிடையில் மோதல்-குடும்பஸ்தர் மரணம்

இரு குடும்பஸ்தர்களுக்கிடையில் மோதல்-குடும்பஸ்தர் மரணம்

வாக்குவாதம் இரு தரப்பினரிடையே ஏற்பட்டு மோதலாக மாறியதில் குடும்பஸ்தர் மரணமானார்.

இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை 65 மீட்டர் வீடு திட்டத்தில் செவ்வாய்க்கிழமை (09) நள்ளிரவு இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையான 29 வயதுடைய அலாவுதீன் ரிஷாத் என்ற குடும்பஸ்தரே குறித்த மோதலில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்தவராவார்.

உயிரிழந்தவருக்கும் அவருடைய முன் வீட்டில் வசித்து வந்த நபருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர் மோதலாக மாறியதில் கூறிய ஆயுதங்களினால் தாக்கப்பட்டு குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இந்த சம்பவம் தொடர்பாக அம்பாறை மாவட்ட விசேட தடயவியல் பொலிஸார் ஸ்தலத்திற்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இச்சம்பவத்தில் உயிரிழந்த குடும்பஸ்தரின் சடலம் கல்முனை ஆதார வைத்தியசாலை சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This