இந்திய தொழில் கூட்டமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் பிரதமர் இடையே சந்திப்பு

இந்திய தொழில் கூட்டமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் பிரதமர் இடையே சந்திப்பு

இந்திய தொழில் கூட்டமைப்பின் (CII) தலைமை நிர்வாக அதிகாரிகள் (CEO) குழுவிற்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிற்கும் இடையிலான சந்திப்பு நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.

இரு நாடுகளுக்கும் இடையேயான தொடர்ச்சியான ஒத்துழைப்பு, குறிப்பாக பொருளாதார மீட்சி மற்றும் வளர்ச்சிக்கு பிரதமர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அண்மைய இந்திய விஜயத்தின் ஊடாக இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகள் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளன என்பதை இந்தியக் குழு மேலும் உறுதிப்படுத்தியது.

தொழில்நுட்பம், உற்பத்தி, கல்வி, புதுமை, தொழில்முனைவு, விவசாயம், எரிசக்தி மற்றும் சுற்றுலா போன்ற முக்கிய துறைகளில் வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்துவது தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

இளைஞர், பெண் தொழில்முனைவோர் மற்றும் சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் (SME) துறையை ஆதரிப்பதற்கு சிறந்த முதலீட்டு உத்திகளின் முக்கியத்துவத்தை பிரதமர் மேலும் வலியுறுத்தினார்.

இந்த நிகழ்வில் இந்தியாவின் உயர் தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இலங்கை பிரதிநிதிகள் குழுவில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, வெளியுறவு அமைச்சகத்தின் தெற்காசியா மற்றும் சார்க் பிரிவின் இயக்குநர் ஜெனரல் நிலுகா கதுருகமுவா மற்றும் அதே அமைச்சகத்தின் தெற்காசியப் பிரிவின் துணை பணிப்பாளர் பிரசாந்தி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் அடங்குவர்.

Share This