உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் – பாதிக்கப்பட்டவர்களுக்கு 245 மில்லியன் ரூபா இழப்பீடு

2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக 245 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றுக்கு இன்று புதன்கிழமை (27.02.2025) அறிவித்தார்.
தகவல் கிடைத்தும் தடுக்க நடவடிக்கை எடுக்கத் தவறியமை தொடர்பான அடிப்படை உரிமை மனுக்கள் மீதான நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கமைய இழப்பீடு செலுத்தப்பட்டுள்ளது.
தலைமை நீதிபதி முர்து பெர்னாண்டோ, நீதிபதிகளான எஸ். துரைராஜா மற்றும் ஏ.எச்.எம்.டி. நவாஸ் ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம்
முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
வழக்கு தொடர்பான 12 மனுக்கள் பரிசீலிக்கப்பட்ட நிலையில் தாக்குதல்களைத் தடுப்பதில் சில அதிகாரிகளின் அசமந்த போக்கிற்கு
அவர்கள் பொறுப்புக்கூற வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.