பணவீக்கம் அதிகரிப்பு

பணவீக்கம் அதிகரிப்பு

ஆண்டு அடிப்படையில் , கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (CCPI) மூலம் அளவிடப்பட்ட பணவீக்கத்தின் வீதம் அதிகரித்துள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு நவம்பவர் மாதத்தில், பணவீக்க வீதம் -2.1 ஆக காணப்பட்ட நிலையில் டிசம்பர் மாதம் -1.7 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நவம்பர் மாதத்தில் 0.6 வீதமாக பதிவான உணவுப் பணவீக்கம் ​​டிசம்பர் மாதத்தில் 0.8 வீதமாக அதிகரித்துள்ளது.

மேலும் நவம்பர் மாதத்தில் -3.3 வீதமாக காணப்பட்ட உணவு அல்லாப் பணவீக்கம் டிசம்பர் மாதத்தில் -3.0 வீதமாக உயர்வடைந்துள்ளது.

Share This