யோஷித, டெய்சி பாட்டி ஆகியோருக்கெதிரான வழக்கு ஒத்திவைப்பு

யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபாரெஸ்ட் ஆகியோருக்கு எதிரான பணமோசடி தடுப்புச் சட்டத்தை மீறியதாகக் கூறப்படும் வழக்கு செப்டம்பர் 22ஆம் திகதிக்கு ஒத்திவைத்து கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று (28) உயர் நீதிமன்ற நீதிபதி சஹான் மாபா பண்டார முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது யோஷித ராஜபக்ச சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ், சாட்சியத்தின் ஒரு பகுதியாக தடயவியல் தணிக்கை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும், அறிக்கையைத் தொகுப்பதில் பயன்படுத்தப்பட்ட மின்னஞ்சல் தொடர்புகள் மற்றும் பல டிஜிட்டல் சாதனங்கள் அடங்கிய 26 குறுந்தகடுகளை ஆய்வு செய்ய நீதிமன்ற அனுமதியை அவர் கோரியிருந்தார்.
எவ்வாறாயினும், இந்த கோரிக்கைக்கு சட்டமா அதிபர் திணைக்களம் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் பணமோசடி தடுப்புச் சட்டங்களை மீறி சுமார் 73 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை சட்டவிரோதமாகச் சம்பாதித்ததாக தெரிவித்து இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சட்டமா அதிபரால் இது குறித்த குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.