நெல் சந்தைப்படுத்தல் சபை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி

நெல் சந்தைப்படுத்தல் சபை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி

1971 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க நெல் சந்தைப்படுத்தல் சபைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

நெல் மற்றும் அரிசியின் சட்டவிரோத இருப்பு மற்றும் சேமிப்பை ஒழுங்குபடுத்துவதற்கான உரிம முறையை அறிமுகப்படுத்துவதோடு தொடர்புடையது.

இந்த முன்மொழிவை வேளாண்மை மற்றும் கால்நடை, நிலங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் சமர்ப்பித்துள்ளார்.

நெல் சந்தைப்படுத்தல் சபைச் சட்டம் இயற்றப்பட்டு 54 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், அதில் திருத்தங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்றும், அது காலாவதியான சட்டமாகவே செயற்படுத்தப்படுகிறது என்றும் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This