முச்சக்கர வண்டியில் இருந்து மீட்கப்பட்ட சடலம்

முச்சக்கர வண்டியில் இருந்து மீட்கப்பட்ட சடலம்

மொரட்டுவ பேருந்து நிலையத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டியில் கத்திக்குத்து காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மொரட்டுமுல்ல பகுதியைச் சேர்ந்த ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரவு 7.30 மணியளவில் 119 அவசர எண்ணுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், அதிகாரிகள் குழு ஒன்று சம்பவ இடத்திற்குச் சென்றனர்.

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், பேருந்து நிறுத்தம் அருகே நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டியின் பின் இருக்கையில் சடலத்தை மீட்டுள்ளனர்.

அவரது உடலில் பலத்த வெட்டுக்காயங்கள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் வேறு எங்காவது வெட்டிக் கொல்லப்பட்டு பின்னர் இந்த இடத்திற்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

உயிரிழந்தவர் மொரட்டுவ முல்ல பகுதியைச் சேர்ந்த ‘சுரா’ என்று அழைக்கப்படும் நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர் துப்பாக்கிச் சூடு மற்றும் கொலை வழக்கில் சந்தேக நபர் என்றும், தற்போது மொரட்டுவ நீதவான் நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக வழக்கு இருப்பதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )