கிளிநொச்சியில் நபரொருவரின் சடலம் மீட்பு

கிளிநொச்சியில் நபரொருவரின் சடலம் மீட்பு

கிளிநொச்சி கணேசபுரம் பகுதியில் உள்ள நீர்ப்பாசன வாய்க்காலில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சடலத்திற்கு அருகில் அவர் பயணித்த மோட்டார் சைக்கிளும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்ட நபர் கிளிநொச்சி ஜெயந்தி நகரைச் சேர்ந்த 37 வயதான 03 பிள்ளைகளின் தந்தை என தெரியவந்துள்ளது.

விபத்தினால் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This