ஜெயந்திபரத்தில் வீடு ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின சடலம் மீட்பு

ஜெயந்திபரத்தில் வீடு ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின சடலம் மீட்பு

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள ஜெயந்திபுரம் பிரதேசத்தில் வீடு ஒன்றில் தனிமையில் வசித்து வந்த ஆண் ஒருவர் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் சடலமாக இன்று திங்கட்கிழமை (26) மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஜெயந்திபுரம் குமாரத்தன் கோவில் வீதியைச் சேர்ந்த 62 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையான ரவி என அழைக்கப்படும் அண்ணாமலை ரவீந்திரன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் வீட்டில் தனிமையில் வாழ்ந்து வருவதுடன் மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றார். இவர் சம்பவதினமான இன்று காலை வீட்டின் முன்பகுதி வாசல் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசரணைகளை மட்டு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This