
பங்களாதேஷின் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கைது
தேர்தல் மோசடி குற்றச்சாட்டில் பங்களாதேஷ் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கே.எம். நூருல் ஹுடா கைது செய்யப்பட்டுள்ளார் .
முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி (BNP), முன்னாள் தேர்தல் ஆணையத் தலைவர் மற்றும் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனா உட்பட 18 பேர் மீது தொடர்ந்த வழக்கின் ஒரு பகுதியாக இந்தக் கைதுகள் இடம்பெற்றுள்ளன.
தேர்தல் விவகாரங்கள் தொடர்பாக முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதல் முறை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
77 வயதான ஹுடா, 2014, 2018 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் பங்களாதேஷில் தேர்தல்களை மேற்பார்வையிட்டார்.
2014, 2018 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் ஹசீனாவின் ஆட்சியின் போது பொதுத் தேர்தல்களில் மோசடி செய்ததாக ஹுடா மற்றும் 19 பேர் மீது BNP வழக்குப் பதிவு செய்தது.
இந்த அனைத்துத் தேர்தல்களிலும் ஹசீனா வெற்றி பெற்றார். பொலிஸாரின் துப்பறியும் பிரிவு அலுவலகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பின்னர், சட்ட நடவடிக்கைகளுக்காக ஹுடா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.
டாக்காவின் வடக்கில் உள்ள ஹுடாவின் வீட்டிற்கு வெளியே ஒரு கும்பல் கூடியிருந்தது. அந்தக் கும்பல் அவரது வீட்டிற்குள் புகுந்து, அவரை இழுத்துச் சென்றது.
ஹுடாவை கும்பல் சுற்றி வளைத்ததாக தகவல் கிடைத்ததும், அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரைக் கைது செய்ததாக வடமேற்கு பொலிஸ் நிலையத் தலைவர் ஹபிசுர் ரஹ்மான் தெரிவித்தார்.
