Author: Nishanthan Subramaniyam

இந்திய முன்னணி வர்த்தகப் பிரதிநிதிகளை டில்லியில் சந்தித்துக் கலந்துரையாடிய அநுர

Nishanthan Subramaniyam- December 17, 2024

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று புதுடில்லியில் இந்திய முன்னணி வர்த்தகப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். இந்தியக் கைத்தொழில் சம்மேளத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கலந்துரையாடலில் ... Read More

மீனவர்களின் பிரச்சினைக்கு மனிதாபிமான முறையில் தீர்வு – இந்தியா – இலங்கை கூட்டறிக்கையில் தெரிவிப்பு

Nishanthan Subramaniyam- December 17, 2024

"மீனவர்கள் விவகாரத்தை மனிதாபிமான முறையில் தீர்க்க வேண்டியதன் அவசியத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி – இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் ஒப்புக்கொண்டனர். ஆக்ரோஷமான நடத்தை அல்லது வன்முறையைத் தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க ... Read More

சமஷ்டி தீர்வே தமிழரின் இலக்கு – சர்வதேச நாடுகள் கடும் அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் ; ஸ்ரீநேசன்

Nishanthan Subramaniyam- December 17, 2024

"புதிய அரசமைப்பில் கூட்டாட்சி முறைமையிலான சமஷ்டி தீர்வே தமிழர்களுக்கு வேண்டும். அதுவே தமிழர்களின் இலக்கு. தமிழர்களின் இழப்புகளுக்கும், வலிகளுக்கும், எதிர்பார்ப்புகளுக்கும் சமஷ்டி தீர்வே ஒரே வழி.” – இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் ... Read More

இலங்கையில் இன ஐக்கியத்துக்கு மாகாண சபைகள் அவசியம் – இந்தியா

Nishanthan Subramaniyam- December 16, 2024

இலங்கையில் இன ஐக்கிய மற்றும் உண்மையான நீதியை நிலைநாட்ட மாகாண சபைகள் இருபதன் அவசியத்தை எடுத்துரைத்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளதாக இந்திய ... Read More

பிரிக்ஸில் இலங்கையை இணைக்குமாறு மோடியிடம் அநுர வேண்டுகோள்

Nishanthan Subramaniyam- December 16, 2024

இலங்கையை பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பில் இணைத்துக்கொள்வது தொடர்பில் சாதகமாக பரிசீலிக்கப்படும் என இந்தியா உறுதியளித்துள்ளது. ரஷ்யா, சீனா, இந்தியா, பிரேசில் மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பில் உருவாக்கப்பட்டு உலகின் பலம்வாய்ந்த பொருளாதார அமைப்பாக ... Read More

இலங்கை இந்திய ரூபாயில் வர்த்தகம் – மோடி, அநுர ஆலோசனை

Nishanthan Subramaniyam- December 16, 2024

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் எதிர்காலத்தில் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது இலங்கை மற்றும் இந்திய ரூபாய்களை பயன்படுத்துவது குறித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இடையில் பேச்சுகள் நடத்தப்பட்டுள்ளன. ... Read More

இந்தியாவின் பாதுகாப்பை பாதிக்கும் வகையில் இலங்கை மண்ணை பயன்படுத்த ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை – மோடியிடம் ஜனாதிபதி அநுர உறுதி

Nishanthan Subramaniyam- December 16, 2024

இந்தியாவின் பாதுகாப்புக்கும் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இலங்கை மண்ணை பயன்படுத்த ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லையென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார ... Read More

ரணில் மீண்டும் டில்லி பயணம்!

Nishanthan Subramaniyam- December 16, 2024

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 22 ஆம் திகதி இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் எனத் தெரியவருகின்றது. ஒரு வாரகாலம் இந்தியாவில் தங்கியிருந்து முக்கியத்துவமிக்க சந்திப்புகளில் அவர் ஈடுபடவுள்ளார் ... Read More

சஜித் அணியின் சபாநாயகர் வேட்பாளராக ரோஹினீ?

Nishanthan Subramaniyam- December 16, 2024

நாடாளுமன்றத்தில் சபாநாயகர் பதவிக்குத் தமது கட்சியில் இருந்தும் வேட்பாளர் ஒருவரை ஐக்கிய மக்கள் சக்தி முன்மொழியவுள்ளது. அந்தவகையில் ஐக்கிய மக்கள் சக்தியின் சபாநாயகர் வேட்பாளராக ரோஹினீ குமாரி விஜேரத்னவின் பெயர் முன்மொழியப்படவுள்ளது என்று தெரியவருகின்றது. Read More

போர் பயிற்சியில் ஈடுபட இந்திய சென்ற இலங்கை கடற்படை குழு

Nishanthan Subramaniyam- December 14, 2024

இலங்கை கடற்படை மற்றும் இந்திய கடற்படைக்கு இடையிலான இருதரப்பு 'SLINEX - 2024' கடற்படை பயிற்சி எதிர்வரும் 17ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது. இந்த பயிற்சியில் ... Read More

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேற்றம் – 18 ஆயிரம் இந்தியர்களுக்கு சிக்கல்

Nishanthan Subramaniyam- December 14, 2024

அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றதும் சுமார் 18 ஆயிரம் இந்தியர்கள் வெளியேற்றப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், வெற்றி பெற்ற குடியரசு கட்சியை சேர்ந்த டிரம்ப் ஜனவரி மாதம் 20 ல் பதவியேற்க ... Read More

புதிய சபாநாயகர் யார்? மூன்று பேரின் பெயர்கள் முன்மொழிவு

Nishanthan Subramaniyam- December 14, 2024

வெற்றிடமாகவுள்ள சபாநாயகர் பதவிக்கு மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. பிரதி சபாநாயகர் றிஸ்வி சாலி, நாடாளுமன்ற உறுப்பினர்களான நிஹால் கலப்பட்டி, லக்ஷ்மன் நிபுன ஆராச்சி ஆகியோரின் பெயர்கள் ... Read More