ஈரானிய தூதுவரை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு அவுஸ்திரேலிய அரசாங்கம் உத்தரவு

ஈரானிய தூதரை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற அவுஸ்திரேலியா அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
ஈரானிய தூதர் அஹ்மத் சதேகி மற்றும் மூன்று அதிகாரிகள் அவுஸ்திரேலியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளனர், மேலும் அவுஸ்திரேலிய அரசாங்கம் தனது தூதர்களை தெஹ்ரானில் இருந்து மீள அழைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த ஆண்டு ஒக்டோபரில் சிட்னி மற்றும் மெல்போர்னில் நடந்த இரண்டு யூத எதிர்ப்பு தாக்குதல்களில் ஈரான் ஈடுபட்டதை அவுஸ்திரேலிய உளவுத்துறை அமைப்புகள் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த இரண்டு சம்பவங்களும் சமூக ஒற்றுமையைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தி சமூகத்தில் முரண்பாடுகளை விதைக்கும் முயற்சி என்று அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையிலேயே, ஈரானிய தூதரை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற அவுஸ்திரேலியா அரசாங்கம் உத்தரவிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி, ஈரானிய தூதருக்கு நாட்டை விட்டு வெளியேற அவுஸ்திரேலியா அரசாங்கம் ஏழு நாட்கள் அவகாசம் அளித்துள்ளதாகவும் அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், அவுஸ்திரேலியா அரசாங்கத்தின் இந்தக் குற்றச்சாட்டுகளை ஈரான் முற்றிலுமாக மறுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்திகள் தெரிவிக்கின்றன.