ஆமி உபுல் மீதான துப்பாக்கிச்சூட்டு சம்பவம் – முக்கிய சந்தேகநபர் கைது

பாதாள உலகக் குழு உறுப்பினர் என கூறப்படும் ஆமி உபுல் என்பவரை சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பில் முக்கிய சந்தேக நபரொருவரை ராகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து ஒரு தொகை போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பட்டுவத்தையைச் சேர்ந்த 45 வயதான முன்னாள் இராணுவ வீரரான ஆமி உபுல், கடந்த வியாழக்கிழமை (03) இரவு முச்சக்கர வண்டியில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.