அம்பாறை – பெரியநீலாவணை பொலிஸ் உத்தியோகத்தர் மீதான தாக்குதல் சம்பவம் – எழுவர் கைது

அம்பாறை – பெரியநீலாவணை பொலிஸ் உத்தியோகத்தர் மீதான தாக்குதல் சம்பவம் – எழுவர் கைது

அம்பாறை – பெரியநீலாவணை பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் எழுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெரியநீலாவணை – பாண்டிருப்பு திருவள்ளுவர் வீதியில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான விசாரணைகளை நேற்றைய தினம் மேற்கொள்ளும்போது குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் மருதமுனை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் பணிமனை முன்னெடுத்து வருகிறது.

 

Share This