ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம் – உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,500 ஐ அண்மித்தது

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம் – உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,500 ஐ அண்மித்தது

ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் பதிவான நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,411 ஆக அதிகரித்துள்ளது.

குனார் மாகாணத்தில் நேற்று முன்தினம் இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவானது.

அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 06 புள்ளிகளாக பதிவாகி இருந்தது.

நங்கர்ஹார் மாகாணத்தில் நுலாலாபாத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

நிலநடுக்கம் காரணமாக வீடுகள், கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்தன. இரவு நேரத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் 800 க்கும் மேற்பட்டவர்கள் மண்ணில் புதையுண்டு உயிரிழந்ததாக முதற் கட்ட தகவல் வெளியானது. மேலும் பலர் காயமடைந்தனர்.

பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை உயர்வடையலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட மோசமான நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,411 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 3,000 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Share This