சீரற்ற வானிலை – உயர்தரப் பரீட்சைகள் ஒத்திவைப்பு

சீரற்ற வானிலை – உயர்தரப் பரீட்சைகள் ஒத்திவைப்பு

சீரற்ற வானிலை காரணமாக உயர்தரப் பரீட்சைகள் இரண்டு நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திக்க லியனகே இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

இதன்படி, இன்றும், நாளையும் பரீட்சை நடைபெறாது என அவர் தெரிவித்துள்ளார். மேலும், பரீட்சைக்கான புதிய திகதிகள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, அனைத்து மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், பிராந்திய சேகரிப்பு மத்திய நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், ஒருங்கிணைப்பு அதிகாரிகள் மற்றும் பரீட்சை நிலையப் பொறுப்பதிகாரிகள் ஆகியோர், பரீட்சை ஒருங்கிணைப்பு மையங்களில் வைக்கப்பட்டுள்ள வினாத்தாள்களின் பாதுகாப்பில் சிறப்புக் கவனம் செலுத்துமாறு வலியுறுத்தி அறிவிப்பு ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல முஸ்லிம் பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நீடித்துள்ள சீரற்ற காலநிலை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் அறிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )