நுவரெலியா, கண்டி பிரதான வீதியில் விபத்து – பலி எண்ணிக்கை 21 ஆக உயர்வு

நுவரெலியா – கண்டி பிரதான வீதியின், ரம்பொட – கெரண்டி எல்ல பகுதியில் பஸ் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்வடைந்துள்ளது.
…………
நுவரெலியா – கண்டி பிரதான வீதியின், ரம்பொட – கெரண்டி எல்ல பகுதியில் பஸ் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்வடைந்துள்ளது.
கதிர்காமத்திலிருந்து நுவரெலியா வழியாக குருணாகல் நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்றே இன்று அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளது.
பஸ் சாரதி உட்பட 30 க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களை கொத்மலை மற்றும் நுவரெலியா வைத்தியசாலைகளில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் உயிரிழந்தோரின் அடையாளங்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில் கொத்மலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.