கலேவெல-குருநாகல் பிரதான வீதியில் விபத்து – கணவனும் மனைவியும் பலி

கலேவெல-குருநாகல் பிரதான வீதியில் விபத்து – கணவனும் மனைவியும் பலி

கலேவெல-குருநாகல் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் கணவனும் மனைவியும் உயிரிழந்துள்ளனர்.

நாயொன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் குழந்தை காயமடைந்த நிலையில் தம்புள்ள வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்னர்.

தெஹியத்த கண்டிய பகுதியைச் சேர்ந்த 31 வயது கணவனும் 28 வயதான மனைவியுமே உயிரிழந்துள்ளனர்.

சம்பவ இடத்திலேயே நாயும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடவுச்சீட்டு பெறுவதற்காக அவர்கள் தெஹியத்தகண்டியிலிருந்து குருநாகலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share This