காலி – கொழும்பு பிரதான வீதியில் விபத்து – ஒருவர் பலி

காலி – கொழும்பு பிரதான வீதியின் பயாகல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹம்பாந்தோட்டையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பஸ்ஸின் பின்புறத்தில் மோட்டார் சைக்கிளொன்று மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிளின் ஓட்டுநர் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.