மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து – பல்கலைக்கழக விரிவுரையாளர் உயிரிழப்பு

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் களனி பல்கலைக்கழகத்தின் மெய்யியல் துறையின் உளவியல் பிரிவின் விரிவுரையாளர் கலாநிதி குணேந்திர கயந்த உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நேற்றிரவு இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குருநாகலிலிருந்து மீரிகம நோக்கிச் சென்ற வேனொன்று வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில்
அதே திசையில் பயணித்த லொறியின் பின்பகுதியில் மோதியுள்ளது.
இதன்போது வேனின் சாரதி உட்பட 07 பேர் காயமடைந்து மீரிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சடலம் மீரிகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மீரிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.