தம்புத்தேகம – நொச்சியாகம வீதியில் விபத்து : இருமாணவர்கள் பலி

தம்புத்தேகம – நொச்சியாகம வீதியில் விபத்து : இருமாணவர்கள் பலி

தம்புத்தேகம – நொச்சியாகம வீதியில் பி ரனோரவ பகுதியில் பேருந்தும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் இரண்டு பாடசாலை மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பேருந்து ஒன்றும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டமையால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் 16 வயதான இரண்டு பாடசாலை மாணவர்களே உயிரிழந்துள்ளனர். இருவரும் 11ஆம் தரத்தில் கல்வி பயில்வதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த இரண்டு மாணவர்களும் ஏதோ ஒரு காரணத்திற்காக தங்கள் வீட்டிலிருந்து வெளியில் சென்று மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்தை எதிர்கொண்டுள்ளனர்.

கண்டியிலிருந்து நொச்சியாகம நோக்கி பயணித்த பேருந்துடன், குறித்த இரண்டு மாணவர்களும் மோட்டார் சைக்கிளின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல், பேருந்துடன் நேருக்கு நேர் மோதியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Share This