ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் விபத்து – ஐவர் வைத்தியசாலையில்

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் முச்சக்கர வண்டியொன்று விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட ஐவர் காயமடைந்துள்ளனர்.
நானு ஓயா ஹூலங்வங்குவ பகுதியில் இன்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
தலவாக்கலையிலிருந்து நுவரெலியா உடபுஸ்ஸல்லாவ நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியொன்று, வேகக் கட்டுப்பாட்டை இழந்து பிரதான வீதியில் இருந்து விலகி கவிழ்ந்துள்ளது.
இதன்போது முச்சக்கர வண்டிக்குள் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தினால் முச்சக்கர வண்டிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
