தம்புள்ளை – வேவலவெவ பிரதான வீதியில் விபத்து – ஒருவர் பலி

தம்புள்ளை – வேவலவெவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கெப்பெல பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்துள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் மோட்டார் சைக்கிளின் பின்னால் பயணித்த ஒருலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.