
நாரம்மல பகுதியில் விபத்து – இருவர் உயிரிழப்பு
நாரம்மல, அலஹிடியாவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
லொறி ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து தொலைபேசி கம்பத்தில் மோதி கவிழ்ந்ததில் இன்று (12) இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
லொறியின் பின்புறத்தில் பயணித்த இருவர் காயமடைந்த நிலையில் நாரம்மல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் வவுனியா மற்றும் நெடுங்கேணியைச் சேர்ந்த 26 மற்றும் 29 வயதுடைய இரு இளைஞர்கள் என தெரியவந்துள்ளது.
லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, நாரம்மல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
CATEGORIES இலங்கை
