யாழ்ப்பாணத்தில் போதைப் பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் 15 கிராம் ஹெரோயின் மற்றும் 02 கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞர் ஒருவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
சுன்னாகம் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய, சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ராமநாயக்க மற்றும் சுன்னாகம் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி கெலும் ஆகியோரின் வழிப்படுத்தலுக்கு அமைவாக வீடொன்று முற்றுகையிடப்பட்டு இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.