வாக்குச் சீட்டுகளுடன் சர்வஜன பலய கட்சி வேட்பாளர் ஒருவர் கைது

வாக்குச் சீட்டுகளுடன் சர்வஜன பலய கட்சி வேட்பாளர் ஒருவர் கைது

சர்வஜன பலய கட்சியிலிருந்து புத்தளம் மாநகர சபைக்கு போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் 85 வாக்குச் சீட்டுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக புத்தளம் தேர்தல் அதிகாரியால் வழங்கப்பட்ட வாக்காளர் அட்டைகள் சந்தேக நபரிடம்
இருந்து கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம் உதவித் தேர்தல் ஆணையாளர் மற்றும் பொலிஸார் புத்தளம் ரத்மல்யாய பகுதியில் நடத்திய சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

குறித்த வாக்காளர் அட்டைகளை தபாற்காரர் அவருக்கு வழங்கியதாக தெரியவந்துள்ளது.

மேலும் சந்தேகத்திற்குரிய தபாற்காரர் காணாமற் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share This