கலாஓயாவில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

புத்தளம், வண்ணாத்திவில்லு பகுதியில் அமைந்துள்ள கலாஓயாவில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
மேலும் 22 வயதான பெண் ஒருவர் காணாமற் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கலாஓயாவில் சிலருடன் நீராடிக் கொண்டிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் 42 வயதான நபரொருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இருவரும் முந்தல் மற்றும் கற்பிட்டி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காணாமற்போன பெண்ணை தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.