அநுராதபுரத்தில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

அநுராதபுரம், கஹட்டகஸ்திகிலிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
பாலிப்பொத்தான குளத்தில் நேற்று நீராடச் சென்றவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இரத்மல்கஹவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 76 வயதுடையவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கஹட்டகஸ்திகிலிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.