கண் திருஷ்டி சாதாரணமானது அல்லது…எளிய பரிகாரங்களால் நீக்கலாம்
![கண் திருஷ்டி சாதாரணமானது அல்லது…எளிய பரிகாரங்களால் நீக்கலாம் கண் திருஷ்டி சாதாரணமானது அல்லது…எளிய பரிகாரங்களால் நீக்கலாம்](https://oruvan.com/wp-content/uploads/2025/02/chennai-quartet.jpg)
கண் திருஷ்டியை நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. காரணம், கண் திருஷ்டியினால் எத்தனையே பேரின் வாழ்க்கை சின்னாபின்னமாகியுள்ளது.
அதன்படி, நமக்கு கண் திருஷ்டி இருப்பதை சில அறிகுறிகளின் மூலம் தெரிந்துகொள்ள முடியும்.
கண் திருஷ்டி ஒருவருக்கு அதிகமாக இருக்கும்போது அவர் புதிய ஆடை அணியும்போது அது எங்கேயாவத பட்டு கிழிந்துபோகும் அல்லது அந்த ஆடையில் கருப்பு நிற கறை படியும்.
தம்பதியருக்கிடையில் அடிக்கடி சண்டை, வாக்குவாதம், உறவினர்களுடன் பிரச்சினை இருக்கும்பட்சத்தில் அவர்களுக்கு அதிகமாக கண் திருஷ்டி இருப்பதாக கூறப்படுகிறது.
கண் திருஷ்டி இருக்கும்பட்சத்தில் அவர்களுக்கு அடிக்கடி உடல் நலம் சரியில்லாமல் போகும். எதிலும் ஒரு ஈடுபாடு இருக்காது.
ஒன்றன்பின் ஒன்றாக பிரச்சினைகள் வந்துகொண்டே இருந்தால் அல்லது பொருட்கள் தொலைந்து போனால், காரியத் தடை ஏற்பட்டால், பிரிவு, நஷ்டம் ஆகியவை கண் திருஷ்டிக்கான அறிகுறிகளாகும்.
மற்றவர்களுடன் ஏற்படும் ஒருவித எரிச்சல் உணர்வு, கெட்ட கனவுகள், உறக்கமின்மை, அழுகை, எதிர்மறை எண்ணங்கள் போன்றவையும் கண் திருஷ்டிக்கான அறிகுறிகள் எனக் கூறப்படுகிறது.
கண்திருஷ்டி நீங்க பரிகாரங்கள்
எந்தவித குறைபாடும் இல்லாத எலுமிச்சைப் பழத்தை இரண்டாக வெட்டி அதில் ஒரு பகுதியில் குங்குமம் மற்றும் இன்னொரு பகுதியில் மஞ்சள் தடவி வீட்டின் தலைவாசலில் வைத்தால் கண் திருஷ்டி நீங்கும்.
ஐந்து கிராம்புகளுடன் சிறிது வெள்ளைப் பூண்டின் உரித்த தோலை சேர்த்து தூபம் போட திருஷ்டி விலகும்.