ட்ரம்பால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு நெருக்கடி

ட்ரம்பால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு நெருக்கடி

அமெரிக்க குடிமக்கள் அல்லது இஸ்ரேல் போன்ற அமெரிக்க நட்பு நாடுகளின் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணைகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக பொருளாதார மற்றும் பயணத் தடைகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்துள்ளார்.

ட்ரம்பின் இந்த நடவடிக்கை சில வெளிநாடுகளில் கண்டனத்தையும் – சில நாடுகளில் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) என்பது இனப்படுகொலை, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்களுக்கு வழக்குத் தொடர அதிகாரம் கொண்ட உலகளாவிய நீதிமன்றமாகும்.

இந்நிலையில் ட்ரம்பின் இந்த நடவடிக்கைக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கண்டனம் வெளியிட்டுள்ளது.

ஐ.சி.சி அதன் 125 உறுப்பு நாடுகளையும் அதன் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு அழைப்பு விடுத்தது.

“நீதிமன்றம் அதன் ஊழியர்களுக்கு ஆதரவாக உறுதியாக நிற்பதாக இன்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

Share This