ரஷ்ய இராணுவத்தில் பணியாற்றிய 59 இலங்கையர்கள் உயிரிழப்பு – உறுதிப்படுத்திய அமைச்சர்
![ரஷ்ய இராணுவத்தில் பணியாற்றிய 59 இலங்கையர்கள் உயிரிழப்பு – உறுதிப்படுத்திய அமைச்சர் ரஷ்ய இராணுவத்தில் பணியாற்றிய 59 இலங்கையர்கள் உயிரிழப்பு – உறுதிப்படுத்திய அமைச்சர்](https://oruvan.com/wp-content/uploads/2025/02/vijitha.jpg)
ஜனவரி மாதம் 20 ஆம் திகதி வரையான நிலவரப்படி, ரஷ்ய இராணுவத்தில் பணியாற்றிய 59 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
ரஷ்ய இராணுவத்தில் 554 இலங்கையர்கள் இணைந்துள்ளதாகவும், அவர்கள் வலுக்கட்டாயமாக ஆட்சேர்ப்பு செய்யப்படவில்லை என்றும் தெரியவருகிறது.
மேலும் அவர்கள் இந்த நாட்டிலுள்ள தங்கள் உறவினர்களுடன் தொடர்பைப் பேணுவதற்குத் தேவையான வசதிகளை வழங்குமாறு ரஷ்யாவில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.