தேங்காய் பற்றாக்குறைக்கு முறையான அரசாங்கக் கொள்கை இன்மையே காரணம் – பிரதமர்
தென்னைப் பயிர்ச்செய்கையை மேம்படுத்துவதற்கு முறையான அரசாங்கக் கொள்கை இன்மையே தற்போது நிலவும் தேங்காய் பற்றாக்குறைக்குக் காரணம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்
நாடாளுமன்றில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த பிரதமர்,
இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு தற்போதைய அரசாங்கம் விரிவான கொள்கையை வகுப்பதில் செயற்பட்டு வருகிறது.
இந்தத் துறையை ஆதரிப்பதற்காக ஏற்கனவே பல குறுகிய கால திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன.
இந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக, தென்னை சாகுபடியை மேம்படுத்துவதற்காக இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கம் கூடுதல் நிதியை ஒதுக்கியுள்ளது.
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள நிறுவனங்கள் உள்ளூர் தேங்காய் உற்பத்தியை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை செயற்படுத்தி வருகின்றன.
பயனுள்ள விவசாய நடைமுறைகளை அடையாளம் காணல், நோய்கள் மற்றும் பூச்சிகளை நிர்வகிப்பதற்கான தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்குதல் மற்றும் தென்னை துறையை வலுப்படுத்துவதற்கான கொள்கை பரிந்துரைகளை சமர்ப்பித்தல் ஆகியவை இதில் அடங்கும்” என்றார்.