காசாவை அமெரிக்காவின் கட்டுக்குள் கொண்டுவர திட்டம் – நாளுக்கு நாள் அதிர்ச்சிடைய வைக்கும் ட்ரம்பின் அறிவிப்புகள்

காசாவை அமெரிக்காவின் கட்டுக்குள் கொண்டுவர திட்டம் – நாளுக்கு நாள் அதிர்ச்சிடைய வைக்கும் ட்ரம்பின் அறிவிப்புகள்

அமெரிக்காவால் காசாவை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இதன்போது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் இணைந்திருந்தார்.

பலஸ்தீனியர்கள் அண்டை நாடுகளுக்கு இடம்பெயர்ந்த பின்னர் போரால் பாதிக்கப்பட்ட காசா பகுதியை அமெரிக்கா கைப்பற்றி உலக மக்கள் அங்கு வசிக்கும் வகையில் அந்த பகுதியை மேம்படுத்த வேண்டும் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியின் இரண்டாவது பதவிக்காலத்தில் விஜயம் மேற்கொண்ட முதல் வெளிநாட்டுத் தலைவரான நெதன்யாகு, ட்ரம்பின் திட்டம் கவனம் செலுத்தத்தக்கது என்றார்.

ட்ரம்பின் இந்த கூற்று பெரும் பதற்றத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. அவர் இன அழிப்பு பிரச்சாரத்தை ஆதரிப்பார் என்ற அச்சத்தைத் தூண்டியுள்ளதாக கருத்துகள் மேலோங்கியுள்ளன.

இந்நிலையில் ட்ரம்பிற்கு பதிலளிக்கும் வகையில் ஹமாஸ் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அவரது திட்டங்கள் “பிராந்தியத்தில் குழப்பத்தையும் பதற்றத்தையும் உருவாக்குவதற்கான ஒரு செய்முறையாகும். காசா பகுதியில் உள்ள எங்கள் மக்கள் இந்த திட்டங்களை நிறைவேற்ற அனுமதிக்க மாட்டார்கள்” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, நெதன்யாகுவின் வருகையை கண்டித்து வோஷிங்டன், டிசியில் கூடியிருந்த போராட்டக்காரர்கள், டிரம்ப் போர் குற்றவாளியை
வெள்ளை மாளிகைக்கு அழைத்ததாக குற்றம் சுமத்துகின்றனர்.

 

Share This