நலன்புரி நடவடிக்கைள் மீள் பரிசீலனை செய்யப்பட வேண்டும் – சிறிதரன்

நலன்புரி நடவடிக்கைள் மீள் பரிசீலனை செய்யப்பட வேண்டும் – சிறிதரன்

மீளக்குடியேறிய மக்களுக்காக வழங்கப்படுகின்ற உதவிகள் என்பது கடந்த கால அரசுகளில் சரியானமுறையில் மேற்கொள்ளப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில்  இன்று  வியாழக்கிழமை கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

நலன்புரி நடவடிக்கைள் மீள் பரிசீலனை செய்யப்பட வேண்டும். நலன்புரி தேவைப்படுவோருக்கு இன்றி வசதிப்படைத்தோருக்கு நலன்புரி
சென்றடைந்ததை காணமுடிகின்றது. தேவையுடையோர் பயனடைய வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.

குறிப்பாக வடக்கு, கிழக்கு மாவட்டங்களில் உள்ள பெரும்பாலானோர் தாங்கள் மீள்குடியேறிய போது அவர்களுக்கு ஒன்றரை இலட்சத்திலிருந்து இரண்டரை மூன்று இலட்சம் வரையிலான மீள்குடியேற்ற நிதி வழங்கப்பட்டது. ஆனால் பல மாவட்டங்களில் அந்த நிதி சரியான முறையில் கணக்கிடவோ வழங்கப்படவோ இல்லை.

குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் 38,000 குடும்பங்கள் மீளக்குடியேறியிருந்தார்கள. இதில் 11,791 பேருக்கு மாத்திரமே மீள்குடியேற்ற நிதி வழங்கப்பட்டிருக்கிறது. மீதமுள்ளோருக்கு இதுவரை அந்த நிதி வழங்கப்படவில்லை.

இந்த அரசின் காலத்திலாவது நீதியான முறையில் அந்தந்த மாவட்ட அரசாங்க அதிபர்கள் அதற்கான விழிப்புணர்வை மக்களுக்கு வழங்கவேண்டும். அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இது அவர்களின் அடிப்படை உரிமை” என்றார்.

Share This