தொடரும் க்ளீன் ஸ்ரீலங்கா திட்டம்

தொடரும் க்ளீன் ஸ்ரீலங்கா திட்டம்

க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்துடன் இணைந்து பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்ட போக்குவரத்து நடவடிக்கைகள் நாடு முழுவதும் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன.

சில முச்சக்கரவண்டி ஓட்டுநர்கள் தங்கள் வாகனங்களில் சேர்த்துள்ள தேவையற்ற அலங்காரங்களை அகற்றுவதையும் காணக்கூடியதாக உள்ளது.

க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்திற்கிணங்க, கொழும்பு உட்பட நாட்டின் பல பகுதிகளில் பேருந்துகள், முச்சக்கர வண்டிகள் மற்றும் பிற வாகனங்களில் இருந்து பாதுகாப்பற்ற சாதனங்களை அகற்றும் பணியை பொலிஸார் சமீபத்தில் தொடங்கினர்.

மேலும் இந்த நடவடிக்கைகள் பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தாமல் தொடரும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும், பேருந்துகள் மற்றும் முச்சக்கர வண்டிகளில் உள்ள அலங்காரப் பொருட்களை அகற்றுவதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், முச்சக்கர வண்டிகளை அலங்கரிக்கப் பயன்படுத்தப்படும் துணைப் பொருட்களை விற்கும் கடை உரிமையாளர்கள், தங்கள் விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

மேலும், க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் மொரட்டுவ – சொய்சாபுர பகுதியில் இன்று காலை ஒரு துப்புரவு நிகழ்ச்சி நடைபெற்றது.

Share This