ஹோர்முஸ் நீரிணையை கடந்த ஈரான் கப்பல்கள்

ஹோர்முஸ் நீரிணையை கடந்த ஈரான் கப்பல்கள்

ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்கா முற்றுகையிட்டுள்ள போதிலும் அச்சுறுத்தலைப் பொருட்படுத்தாமல், அதன் கட்டுப்பாட்டை மீறி, 34 ஈரான் கப்பல்கள் எல்லை தாண்டிச் சென்றுள்ளதாக பைனான்ஷியல் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஹோர்முஸ் நீரிணை அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், ஈரான் மீதான கடல்சார் முற்றுகை உத்தி ‘மிகப்பெரிய வெற்றி’ அடைந்துள்ளதாகவும் கூறியிருந்த பின்புலத்திலேயே ஈரானின் 34 கப்பல்கள் இவ்வாறு எல்லை தாண்டி பயணித்துள்ளன.

வெளியேறிய கப்பல்களில் குறைந்தது 6 கப்பல்கள் ஈரானிய மசகு எண்ணெயை ஏற்றிச் சென்றுள்ளதாகவும் பைனான்ஷியல் டைம்ஸ் கூறியுள்ளது.

அந்த 6 கப்பல்களிலும் மொத்தமாக சுமார் 10.7 மில்லியன் பீப்பாய்களில் எண்ணெய் இருந்ததாகக் கூறப்படுகிறது.

தடையை மீறிச் சென்ற இந்த எண்ணெய் கப்பல்கள் மூலமாக ஈரானுக்கு சுமார் 910 மில்லியன் டொலர் வருவாய் கிடைக்கும் என மதிப்பிடப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )