
குருணாகல் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக, இரண்டு மாவட்டங்களுக்கு உட்பட்ட சில பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதலாம் கட்ட (மஞ்சள்) மண்சரிவு எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கை அறிவிப்பு 2026.04.23 மாலை 4:00 மணி முதல் 2024.04.24 மாலை 4:00 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குருணாகல் மாவட்டத்தின் ரிதிகம பிரதேச செயலகப் பிரிவு
இரத்தினபுரி மாவட்டத்தின் குருவிட்ட, கலவானை, இரத்தினபுரி, நிவித்திகலை, பெல்மதுள்ளை மற்றும் எஹலியகொட ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதலாம் கட்ட அவதானம் மட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
TAGS மண்சரிவு
