ஆட்சி மாற்றம் வேண்டாம் என அஜித் கூறினாரா?

ஆட்சி மாற்றம் வேண்டாம் என அஜித் கூறினாரா?

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் கட்சி என நான்கு முனை போட்டி நிலவுகிறது.

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் முதல் நபராக நடிகர் அஜித் தமது வாக்கை செலுத்தினார். அப்போது ‘No Need’ என அஜித்குமார் கூறியதாக தகவல் பரவியது.

இந்நிலையில் இதுதொடர்பாக அஜித் குமார் மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கம் அளித்தார்.

நடிகர் அஜித் குமார் ஆட்சி மாற்றம் தேவையில்லை என்று கூறியதாக பரவி வரும் தகவல் தவறானது. அவர் அப்படி எந்த கருத்தையும் வெளியிடவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )